அப்பாவை முதல் ஷிப்ட் !
மில் சங்கு எழுப்பும் !
தாத்தாவை எழுப்புவது !
காலையில் வருகிற தொடர் இருமல் !
என்னை எப்பொழுதும் !
அலாரம்தான் எழுப்பும் !
பொட்டப்புள்ளைக்கு இன்னும் !
என்னடி து£க்கமென்று தங்கையை !
அம்மா எழுப்புவாள் !
குளித்து பூஜை செய்து !
அப்பாவுக்கு சோறு கட்டிக் கொடுத்து !
தாத்தாவுக்கு மருந்து தந்து !
எனக்கு காப்பி கொடுத்து !
தங்கைக்கு பின்னல் இட்டு !
ஈயச் சட்டியோடு தீப்பெட்டித் !
தொழிற்சாலைக்குப் !
போகிற அம்மாவை காலையில் !
யார் எழுப்புவார்கள் ? !
!
நன்றி : ஆனந்தவிகடன்

சித்தர்