வ.ந.கிரிதரன்!
தொலைநோக்கிகள் தொலைவுகளை!
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?!
இருப்பியங்குதற்கும் இங்கவை!
இருக்கும் அதிசயந்தானென்ன!!
எனக்கு நினைவு தெரிந்த!
நாளிலிருந்து!
-முற்றத்தில் அப்பாவின் 'சாற'த்தொட்டிலில்!
மல்லாந்திருந்து இரசித்த அன்றிலிருந்து -!
நானும்!
தொலைவுகளை இதனூடு!
மேய்ந்துகொண்டுதான் வருகின்றேன்!
ஒருவித அறிவுப் பசிகொண்டு.!
அடங்கவில்லை அந்தப் பசி!
இன்றுவரை.!
இருந்தும் பால்வீதிகளில் பயணித்தலிலுள்ள!
ஆர்வம் மட்டும் அணைந்திடவில்லை.!
ஒவ்வொருமுறையும் வியப்புடனும், ஆர்வத்துடனும்,!
மர்மங்களை அவிழ்த்துவிட முடியாதாவென்றொரு!
நப்பாசையுடனும் நானும்!
முயன்றுகொண்டுதானிருக்கிறேன்; தொலை நோக்கிக்!
கொண்டுதானிருக்கிறேன்.!
ஓடு 'சடசட'க்கக் கொட்டும் மழைபோல்!
என் நெஞ்சு கவர்ந்த மேலுமொரு!
விடயமிது.!
எத்தனைமுறை பெய்தாலும் அலுக்காத மழைபோல்!
எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவில்லை!
எனக்கு.!
நீண்டு,கவிந்த இரவு.!
வியாபித்திருக்கும் விரிவிசும்பு.!
இயன்றபோதெல்லாம்!
நோக்கிக் கொண்டிதானிருக்கின்றேன்.!
இருக்கும்வரை நோக்கிக் கொண்டுதானிருப்பேன்.!
தொலைநோக்கிகள் தொலைவுகளை!
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?!
இருப்பியங்குதற்கும் இங்கவை!
இருக்கும் அதிசயந்தானென்ன

வ.ந.கிரிதரன்