01.!
அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு!
---------------------------------------------------!
எனக்கொரு வீடு இருந்தது.. !
அங்கே எனக்கொரு போர்வை!
எனக்கென ஒரு தலையணை !
எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது..!
என் தலையணையிடம் நான் நிறைய!
பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன்!
தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்..!
வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும்!
நான்கு கைகொண்டு வீடு எனை!
அணைத்துக் கொள்ளும்..!
எட்டி வெளியே பார்த்தால்!
வாசலில் மல்லிகைத் தெரியும்!
மல்லிகை வீடெல்லாம் எனக்காக மணக்கும்..!
மல்லிகை எனக்கெனப் பூத்திராவிட்டாலும்!
தினமும் பூக்கும் மல்லிகைச் செடியொன்று எனக்கென !
அந்த வீட்டில் இருந்தது..!
அந்த வீட்டில் அப்பா எனக்கு!
முத்தமிட்டிருக்கிறார்!
அம்மா என் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சியிருக்கிறாள்..!
நான் எடுத்த முதல்மதிப்பெண்ணின் அங்கீகாரம்!
சந்தோசங்களெல்லாம்!
அந்த வீட்டில்தான் புதைந்திருக்கின்றன..!
என் தோழி என்னருகிலமர்ந்துப் பேசிய மாலைநேரம்!
அவளென் மடியில் சாய்ந்துக் கொண்டு!
எனைப் பார்த்த பார்வையின் தருணசுகம் !
அவள் புரட்டிப் புரட்டிக் காட்டிய புத்தகத்தின் வாசத்தில்!
கலந்திருந்த அந்நாட்களின் ரசனைகள் என!
எல்லாமே அந்த வீட்டின் திறந்த கதவுகளைத் தாண்டி!
காலத்தால் மூடப்பட்டுக் கிடக்கிறது.. !
நான் கண்ட முதல் கனவு!
ஒவ்வொரு முடிச்சாக கழன்று விழுந்த!
எனக்கும் அந்த வீட்டிற்கான நெருக்கம்!
இனி கிடைக்குமா என நான் ஏங்கி நழுவவிட்ட எல்லாமே!
அந்த வீட்டிலிருக்கிறது..!
அந்த வீட்டில் நான் பிறந்த நொடியின்!
கனம் இன்றும்!
சந்தோசத்தால் நிறைந்தேயிருக்கிறது..!
நான் சத்தமிட்டு சிரித்த சிரிப்புகளையும்!
அந்த வீடுவிட்டு வருகையில் அழுத கண்ணீரையும்!
இன்னும் பத்திரப்படுத்திக்கொண்டேயிருக்கிறது அந்த வீடு..!
எனக்கென இன்னும் ரெண்டு மனசு அங்கே!
ஏங்கி அழுது என் கால்மிதிபடும் நாளெதிர்பார்த்து!
என் நிம்மதியை இரைஞ்சிய படியே வாழ்கிறது..!
என் உயிர் எனக்குத் தெரியாமலே!
புதைபட்ட அவ் வீட்டின் இணக்கத்தை இடைவெளிப் படுத்திய!
இச்சமூகத்தை மனம்விட்டு சபித்தால் தானென்ன? !
போகட்டும்,!
போகட்டும்தான் ஆனால் !
அந்த வீடு ?!
அந்த வீடு ஒரு ஏக்கத்தின் பெருமூச்சு!
எனக்கென அப்பா அம்மா அண்ணன்!
அவர்களுக்கென நான் என ஒரு ஒட்டுமொத்தப் பேரின் !
பெருமூச்சில் தான் உயிகொண்டிருக்கிறது அந்த வீடு.. !
இப்போதும் வருடங்கழித்து அங்கே செல்கையில்!
மண்தரையில் கைவைத்து அந்த வீட்டின் நினைவுகளை!
களைத்துப் பார்த்துக் கொள்கிறேன்..!
ஒரு தேம்பிய அழையின் கண்ணீர்சிந்தி!
அந் நினைவுகளையெல்லாம்!
அங்கேயே புதைத்துவிடுகிறேன்..!
அந்த வீட்டை நினைவுபடுத்தும் பாடல்!
திரைப்படம் தொலைக்காட்சியைக் கூட !
இங்கு வந்தால் பார்க்கமறுக்கிறேன்.. !
ஏதோ கலங்கிய உணர்வினைக் கண்டு!
என் குழந்தைகள் கணவர் அத்தையிங்கே விசாரிக்கையில் !
ச்ச ச்ச ஒன்றுமில்லையே என சற்றே உதறி விடுகிறேன் அந்நாட்களின்!
அவ்வீட்டின் நினைவுதனை !
அது கண்ணீராய் அடைபட்டு !
என்றேனும் கத்தியழுதுவிடும் ஒரு நாளிற்குள் புதையுண்டுக்!
கிடக்கிறது; உள்ளிருக்கும் மரணம்போல்!!!
02.!
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..!
-------------------------------------------------------------!
கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா?!
பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல!
அமரும் மௌனத்தின் கணம்!
கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி!
கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு.,!
ஒவ்வொரு வார இதழ்களின்!
பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப்!
புரட்டுகையில்!
தனது கவிதை வெளிவராத இதழ்!
தீயைப் போலே உள்ளே!
இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது.,!
பசிக்கும் குழந்தை ஓடிச் சென்று!
சமையலறைப் புகுந்து!
ஒவ்வொரு சட்டியாக இதில் சோறிருக்கா!
இதில் சோறிருக்கா யெனத் தேடுமொரு!
வலி நிறைந்தப் பசியது.,!
என்றாலும், தன்னை புதைத்துக் கொள்ளாமலும்!
எரித்துக் கொள்ளாமலும்!
வாரவாரம் சாகும் பல இதயங்களின் மரணத்தை!
மிதித்துக் கொண்டு யாரோ ஒருசிலரின் கவிதைகள்!
எங்கோ ஒரு சில இதழ்களில்!
எப்படியோ வந்துதான் விடுகிறது.,.!
வெளிவராத கவிதைகளெல்லாம்!
வெறுமனே யாரோ படிக்காத அல்லது!
பிரித்துக் கூடப் பார்த்திடாத தபால்களிலோ!
மின்னஞ்சல் வந்துவிழும் இன்பாக்ஸ்களிலோ!
யாருக்கும் அனுப்பப் படாமலே பெருகிக்கிடக்கும்!
டிராப்டாகவோ நிறைந்து நாட்களை மட்டுமே தின்கிறது.,!
பின் நாளொன்றில்!
மொத்தமாக ஒரு கிளிக் அடித்து!
எழுதியக் கவிஞர்கள் குப்பைகளாய் வந்துக் குவிந்திருக்கும்!
மின்னஞ்சல்களின் பெயரோடு சேர்த்து!
டிலிட் செய்யப்பட்டதில் –!
நானும் பலமுறை இறந்துதான்போனேன்...!
!
03.!
மழை; மழையதை வேண்டு.. !
-----------------------------------------!
மழை; மழையோடு கலந்துக்கொண்டால்!
இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்;!
மழையை இரண்டுகைநீட்டி வாரி!
மனதால் அணைத்துக் கொண்டால்!
இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்;!
மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு!
இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை!
உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை!
மழையில் நனைந்ததுண்டா!
நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை!
வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்..!
நாமுண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றுக்ககத்தும்!
மழையே உயிராக கரைந்துள்ளது; மழையில்லையேல்!
சோறில்லை!
மழையில்லையேல் வனமில்லை!
வனமில்லையேல் வறண்டு வெடித்து வெடித்துப் போவோம்!
மழைதான்; மழைதான் நமை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது!
நாமெல்லாம் மழையின் குழந்தைகள்!
மழை நம் தாய்க்கு ஈடு; பெற்றவளைப் பெற்றவளவள் மழை;!
காய்ச்சல் மழையால் வருவதில்லை!
மழைக்கு எதிராக நாம் பழகிவிட்டதால் மழை வலிக்கிறது!
மழையால் குடிசைகள் ஒழுகுவதில்லை –!
குடிசையின் ஈரத்திற்கு நம் மனஓட்டை காரணம்;!
குடிசைகளை குடிசைகளாய் ஆக்கியவன் எவன்?!
குடிசைகளை குடிசைகளென்றே பிரித்தவன் எவன்?!
குடிசைகளை குடிசைகளாகவேயிருக்க சபித்தவன் எவன் ? அவன்!
காரணம் மழைப் பெய்தலுக்கு நடுவே -!
குடிசைக்குள் ஒழுகும் மழைக்கும்;!
மனிதனின் மனக் கிழிசல்தான் ஆங்காங்கே!
குடிசைகளிலும் உடுத்தும் ஆடைகளிலும் தெரிகிறதே யொழிய!
மழைக்கு குடிசையும் சமம்; கோபுரமும் சமம்;!
உண்மையில் மழை வலிக்காது; மழை வரம்!
மழை வேண்டத் தக்க வரம்!
வெடித்த மண்ணுக்குப் பூசவும்!
வறண்ட நிலத்தைப் பூப்பிக்கவும்!
பேசாது மரணித்துப் போகும் மரங்களை காற்றோடு குலாவி!
கொஞ்சவைக்கவும் மழை வேண்டும்!
தன்னலமற்று பாயும் நதிகள் மனிதனுக்குப் பாடமாகி!
ஊரெல்லாம் நீரூரி!
மக்களைக் காக்கும் சாமியாக நதி பாய!
மழை வேண்டும்;!
சுத்தம் செய்யாத தெருக்களை!
அசுத்தம் அப்பிக் கிடக்கும் மனிதர்களை!
மனமாகவும் வெளியாகவும் கலந்து!
மனிதத்தை நிரப்பி மனத்தைக் கழுவவும் மழை வேண்டும்;!
மழை; ஒரு பாடுபொருள்!
கவிதைக்கு' மழை பாடுபொருள்!
கஞ்சிக்கு' மழை பாடுபொருள்!
கழுனியின் உயிர்சக்தி' இப்பிரபஞ்சத்தின் வேள்வி' மழை;!
மழையை வேண்டுங்கள்!
ஒரு விவசாயியைப் போல அண்ணாந்து கைதூக்கி!
மழையம்மா வாடி என்று கையேந்துங்கள்;!
மழைக்குக் கேட்கும்!
மழை வரும்; மழை வரும்; மழை வரணும்!!மழை; மழையோடு கலந்துக்கொண்டால்!
இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்;!
மழையை இரண்டுகைநீட்டி வாரி!
மனதால் அணைத்துக் கொண்டால்!
இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்;!
மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு!
இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை!
உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை!
மழையில் நனைந்ததுண்டா!
நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை!
வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்..!
நாமுண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றுக்ககத்தும்!
மழையே உயிராக கரைந்துள்ளது; மழையில்லையேல்!
சோறில்லை!
மழையில்லையேல் வனமில்லை!
வனமில்லையேல் வறண்டு வெடித்து வெடித்துப் போவோம்!
மழைதான்; மழைதான் நமை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது!
நாமெல்லாம் மழையின் குழந்தைகள்!
மழை நம் தாய்க்கு ஈடு; பெற்றவளைப் பெற்றவளவள் மழை;!
காய்ச்சல் மழையால் வருவதில்லை!
மழைக்கு எதிராக நாம் பழகிவிட்டதால் மழை வலிக்கிறது!
மழையால் குடிசைகள் ஒழுகுவதில்லை –!
குடிசையின் ஈரத்திற்கு நம் மனஓட்டை காரணம்;!
குடிசைகளை குடிசைகளாய் ஆக்கியவன் எவன்?!
குடிசைகளை குடிசைகளென்றே பிரித்தவன் எவன்?!
குடிசைகளை குடிசைகளாகவேயிருக்க சபித்தவன் எவன் ? அவன்!
காரணம் மழைப் பெய்தலுக்கு நடுவே -!
குடிசைக்குள் ஒழுகும் மழைக்கும்;!
மனிதனின் மனக் கிழிசல்தான் ஆங்காங்கே!
குடிசைகளிலும் உடுத்தும் ஆடைகளிலும் தெரிகிறதே யொழிய!
மழைக்கு குடிசையும் சமம்; கோபுரமும் சமம்;!
உண்மையில் மழை வலிக்காது; மழை வரம்!
மழை வேண்டத் தக்க வரம்!
வெடித்த மண்ணுக்குப் பூசவும்!
வறண்ட நிலத்தைப் பூப்பிக்கவும்!
பேசாது மரணித்துப் போகும் மரங்களை காற்றோடு குலாவி!
கொஞ்சவைக்கவும் மழை வேண்டும்!
தன்னலமற்று பாயும் நதிகள் மனிதனுக்குப் பாடமாகி!
ஊரெல்லாம் நீரூரி!
மக்களைக் காக்கும் சாமியாக நதி பாய!
மழை வேண்டும்;!
சுத்தம் செய்யாத தெருக்களை!
அசுத்தம் அப்பிக் கிடக்கும் மனிதர்களை!
மனமாகவும் வெளியாகவும் கலந்து!
மனிதத்தை நிரப்பி மனத்தைக் கழுவவும் மழை வேண்டும்;!
மழை; ஒரு பாடுபொருள்!
கவிதைக்கு' மழை பாடுபொருள்!
கஞ்சிக்கு' மழை பாடுபொருள்!
கழுனியின் உயிர்சக்தி' இப்பிரபஞ்சத்தின் வேள்வி' மழை;!
மழையை வேண்டுங்கள்!
ஒரு விவசாயியைப் போல அண்ணாந்து கைதூக்கி!
மழையம்மா வாடி என்று கையேந்துங்கள்;!
மழைக்குக் கேட்கும்!
மழை வரும்; மழை வரும்; மழை வரணும்
வித்யாசாகர்