மீன் விற்கும் ஒருத்தியும்!
பெருங்காயம் விற்கும் ஒருத்தியும்!
ஒரே வீட்டில் இருந்தார்கள்!
இவர்கள்!
கண்ணயர்ந்தவேளையில் !
சுவரில் சாய்ந்திருக்கும்!
கூடைகள்!
நூகர்தலுக்கு!
இடம் வலம் ஏது?!
கலந்தேயிருந்தன!
வாசனையும் வீச்சமும்!
ஆத்திரமோ அவசரமோ!
நாள் ஒன்றில் மாறிப்போன!
கூடைகளிருந்து கூடுதலாகவே!
விற்றும் தீர்த்தன !
சமைத்தவர்கள் வீடுகளிலிருந்து!
கலந்தே வெளியேறுகிறது!
நாசிகள் தேர்ந்தெடுத்து!
கொள்கின்றன தேவையானவற்றை
வேல் கண்ணன்