காதலுடன் - உமா

Photo by Visax on Unsplash

பழகிய நாட்களின் இன்பங்களும் ,
பிரிந்த நாட்களின் துன்பங்களும் ,
என் நாட் குறிபேட்டில்
நிரம்பி உள்ளதோ இல்லையோ
என் தனிமை நீள்கிறது
நீயும் வந்து நிரப்பாமல்...

என் ரத்த நாளங்களில் எல்லாம்
உன் நியாபக சுனாமி

பிரதிபலிப்பாய் ,

சுழல் காற்றில் சிக்கிய
ஒற்றை இலையாய் நான்

மாலை நேர  நம் முதற் சந்திப்பில்
சாலை ஓர பூங்கா நாற்காலியின்
ஒரு முனையில் நீயும் ,
மறு முனையில் நானும் அமர
மஞ்சள் வெயில் பட்டு
கூசிய என் கண் பார்த்து
உன்  நிழலில் அமர சொல்லி
என் அருகில் அமர்ந்து
கரம் பிடித்தாய்

அருகில் இருந்த தருணம்
உனக்காய் நானும் ,
எனக்காய் நீயும்
என்று கூறி விட்டு தனியே இன்று
வாழ்ந்து பார்கையில் தான் வலிக்கிறது

செல்லாத காரணங்களை எல்லாம்
காரணம் சொல்லி ,சொல்லி
விட்டு கொடுக்கப்பட்ட
நம் காதலை ,
காதலுடன் ,
காதலுக்காக
விற்று கொடுத்து விட்டதாய்
புலம்பும் என் மனம்
இன்னும் கூட எங்கெங்கும்
கை நீட்டுகிறது
உன் நிழல் தேடி
உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.