எங்கு போனாய்? - உமா

Photo by Pawel Czerwinski on Unsplash

திடீரென எங்கு போய் விட்டாய் நீ?
சுமூகமான தொடர்பில் தானே இருந்தோம் நீயும் ,நானும் ,

உன்னை காணும் போது மலர்ந்த உதடுகள்
இன்று உலர்ந்து போனது என்ன ?
வேலை செய்த அலுப்பும் ,
மனதில் ஏற்படும் சலிப்பும் ,
உன்னை கண்டவுடன் ,
காணாமல் போகும் தம்பி என்பேன் நான்!
காரணம்,
அலுப்பு தீர ஆறுதல் சொன்னாய்!
சலிப்பு தீர பிரார்த்தனை செய்தாய்!
இன்றோ ,
நீ பூஜித்த கோவில் சிலைகளும் ,
உன்னால் புகழ் பெற்ற ஓவியங்களும் ,
பேசி திரிந்த வகுப்பறையும் ,
நாம்நடந்து சென்ற பாதைகளும் ,
கையில் இருக்கும் அலைபேசியும் ,
உன் தலை கொட்டிய மோதிர விரலும் ,
கை நீட்டி உன்னை காற்றில் தேடுகிறது!
ஆன்மாவுக்கு மரணம் இல்லை
என்பது மனசுக்கு புரிகிறது
என்றாலும்
உன்னிடம் "ஏன்  இப்படி அவசர பட்ட என கேட்க தோணுது ! "
உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.