அவள் நடந்தாள்!
எல்லையற்ற பயணமது!
அவள் கண்களிலிருந்து!
கருணையை பருகிக் கொண்டனர்!
அவளது வற்றா முலைகள்!
பலரின் பசியைப் போக்கியது!
அவளது இதயம்!
குழந்தைகளால் பூத்தது!
நம்பிக்கை இழந்தவர்கள்!
அவளின் வார்த்தைகளில்!
உயிர்த்தெழுந்தனர்!
போரும் வாழ்வும்!
இழப்பும் கசப்பும்!
நெஞ்சழுத்த அவள் நடந்தாள்!
அவளின் சோகத்தை!
யாரும் வாசித்ததில்லை!
அவள் அதை விரும்புவதுமில்லை!
மறுபடி மறுபடி!
உயிர்த்தல் அவள்!
வாழ்வாய் இருந்தது!
தன் சின்னக்கால்களால்!
தளரா உறுதியுடன்!
பல்லாயிரம் வருடத்து!
பயணம் அவள் தொடர்ந்தாள்!
அம்மம்மாவின் நினைவாக!
ராகவன்!
30.11.06

ராகவன்