அடுத்த கணப்பொழுது !
உடனடியாக பறிக்கப்படும் !
உரிமைகள்...! !
சில சமயங்களில் உயிரும்...! !
சகோதரிகளின்... !
உயிரிலும் மேலான கற்பு !
பரிதாபநிலையில் களவாடப்படும்...! !
உடல்மட்டும்... !
மண்ணோடு மண்ணாகிப்போகும் !
அல்லது... !
கல்லோடு கட்டப்பட்டு கண்ணீருடன்... !
தண்ணீரில் மூழ்கிப்போகும்...! !
பாதுகாப்பு... !
உறுதிப்படுத்தப்படாத நிலையில் !
உயிருக்கு உறுதியற்ற பதற்றம் !
எப்போதும் நிலவலாம் !
மனிதம் பரவியுள்ள !
புனித தேவாலையத்தில்கூட !
அமைதி குலையும் !
கொடிய கொலைக்கூத்து அரங்கேறும்...! !
எமக்கோ என்றும்... !
மாறாத துயராய் தொடரும் !
மாமனித மரணங்கள்..! !
அவர்களுக்கோ அது !
வெறும்... !
பத்தோடு பதினொன்றாய்...! !
இன்னும் !
சமாதானம் வாழ்கிறது என்று !
எப்போதோ... !
செத்துப்போன ஒன்றுக்கு !
உயிர்கொடுக்கும் !
இன்றய அரசியலுக்கு நடுவில்... !
ஏதோ... !
ஜனநாயகம் என்றும் !
அடிக்கடி அலட்டிக்கொள்கிறார்கள் !
இருப்பினும்... !
இன்று வரை... !
இராணுவத்தின் ஆட்சிதான்...! !
இன்னும்... !
ஒரு இனத்தின்மேல் !
திணிக்கப்பட்ட... !
அடக்குமுறை அரசபயங்கரவாதமாய்..!!! !
!
த.சரீஷ் !
12.01.2006 (பாரீஸ்)
த.சரீஷ்