உன்னை நீ அறிவாய் ! - ச இரவிச்சந்திரன்

Photo by Daniele Levis Pelusi on Unsplash

உன்னை நீ அறிவாய் தோழா !
உன் உயரம் தெரியாதவரை !
சின்னஞ்சிறு மேடும் பெரு மலையே !
உயரம் அறிந்தவர்க்கோ !
பெருமலையுஞ் சிறுமேடே!
நீண்ட இரவின் இருள் கூட !
சிலமணித்துளிகளில் கலையும் போது !
உன் இயலாமை இருள்தானா மறையாது ?!
உன்னை பற்றி தெரிந்துகொள்ளாதவரை !
உலகின் கடைகோடியில் நீ !
உன் உயரம் தெரிந்துகொண்டால் !
உன் திறம் தெரிந்து கொண்டால்!
உலகம் உன் கைகளில் !
இருள் கிழிக்கும் பகலவனாய் !
இயலாமை இருள் அகற்றி வா !
உன் பார்வை!
வான் தாண்டியும் போகும் !
உன் விரல்கள் ஆதவனையும் உருட்டிவிடும் !
எழுந்து வா !
உன்னை எதிர்பார்த்து இந்த உலகம்!
உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறது !
உன் இமை திறப்பிற்காக !
ஒட்டு மொத்த மனித சமுதாயமே !
விழி முன் தவம் கிடக்கிறது!
ச இரவிச்சந்திரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.