புயலதிகாரம் - ரவி (சுவிஸ்)

Photo by engin akyurt on Unsplash

அது ஒரு மாலைப்பொழுது !
வானொலியின் புயல் எச்சரிக்கையின்மீது !
நான் !
தூக்கி வைத்திருந்தேன் அந்த !
மாலைப்பொழுதை. !
கருமுகில்களின் பேயசைவில் !
மனசு அறுத்துக் கொண்டு !
அலைந்தது. !
பூட்டிய அறைக்குள் நான் !
நின்றேன் - அதுவே !
பாதுகாப்பானதாகப் பட்டதால். !
உருவாகப்போகும் பயங்கரத்தை விழுங்கி !
முன்னவஸ்தைப்பட்டேன். !
இரைச்சல் எங்குமாய் வியாபித்தது. !
பேய்க் காற்று, !
மழையைத் துரத்தியது !
மரக் கிளைகளை து£க்கி !
வீசியது. !
மாலைப் பொழுதின் ரம்மியத்தை !
கருமையாடி !
கொன்று போட்டது. !
வீட்டின் யன்னல்களை !
மூடிவைத்திருந்தேன் !
அதில் மீண்டும் மீண்டும் !
நிர்க்கதியாய் மழைத்துளிகள் மோதி !
வழிந்தன. !
கண்வெளி மரங்களை !
நிலத்தில் சாய்க்கும் வெறியிலும் மேலாய் !
சிறகுகட்டிப் பறந்துவிடு என்பதுபோல் !
இலைவரி உதைத்தது !
அதன் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதுபோல் !
அலங்கோலப் படுத்தியது அந்த !
வெறிக் காற்று. !
மழைத்துளிகள் !
மரத்தின் இலைக்காட்டுக்குள் வீழ்ந்து !
அழிந்ததை நான் !
பார்க்கவில்லை !
மரம் அழுததை !
அன்றுதான் பார்த்தேன். !
என் வீட்டு முற்றத்து மரத்தின் !
வீழ்கையை என் !
கண்முன்னால் பார்க்கப் போகிறேனா? !
மனசு இசைய மறுத்தது. !
ஆனாலும் அது நடந்தது. !
ஒரு சல்லி வேரைக்கூட விடமாட்டேன் !
என்று ஏன்தான் !
மதம்கொண்டு எனது பார்வைப் பரப்பைத் !
தாக்கியது இந்தப் புயல். !
எல்லாம் ஓய்ந்த பின்னும் !
சின்னாபின்னப்பட்ட இந்த மாலையை நான் !
ஒழுங்குபடுத்த முடியவில்லை. !
சிதைக்கப்பட்ட மழைத்துளிகள் !
உருவி எறியப்பட்ட இலைக் கூட்டங்கள் !
அடித்து நொருக்கப்பட்ட கொப்புகள் !
இதனூடு !
ஒரு மாலைப்பொழுதை கசக்கியெறிந்த அந்தப் !
புயலின் இன்னொரு பிரதியை !
கற்பனையிலிருந்தும்கூட தூக்கியெறியவே விரும்புகிறேன். !
- ரவி (சுவிஸ்180903)
ரவி (சுவிஸ்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.