வார்த்தைகளுள் தமது !
கவலைகளை புகுத்தி !
தனக்களவாய் !
முடிந்தால் கனதியாய் !
ஊதிப்பெருப்பிக்கும் கலையறியா !
குழந்தைகளின் !
போர்ச்சோகம் கொடியது. !
பனிக்காலம் !
கொண்டுபோயிற்று அதன் பசுமையை !
மழலை இழந்த சோகத்தில் !
வாடும் ஓர் தாய்போல் !
இந்த மரமும் ஏதும் இழந்ததுவோ !
அன்றி !
சூரிய முகட்டுக்கு தன் பசுமையை !
அனுப்பிவைத்து - அதன் !
வரவுக்காய் காத்திருக்கிறதுவோ !
அறியேன் நான். !
பனிப்போரில் இழந்த தன் !
பசுமையை எண்ணி !
சோகம் கொள்கிறது இந்த மரம் !
என்று நான் !
எடுத்துக் கொள்கிறேன். !
சிறகொடுக்கி தனியாக !
கொடுங்குகிறது ஓர் குருவி !
போர்பட்ட குழந்தையொன்றின் !
புரியாத சோகங்களும் ஏக்கங்களும் !
இந்தக் குருவியின் இறக்கையுள் !
புகுந்ததோ என்னவோ !
அது கொப்புதறி பறப்பதாயில்லை. !
சூரிய ஒளி !
பனிப் புகாரினூடு வடிந்திருக்கும் இந்த !
மங்கிய பொழுதில் !
ஈரம்பட்டு காட்சிகள் கலைகிறது - !
பார்வைகளை முறித்தபடி. !
அவரவர் பார்வையில் !
சமாதானக் கனவு !
விதம்கொள்கின்றது. !
குழந்தையின் உலகையே !
அங்கீகா¤க்காத அதிகாரப் பிறவி நீ !
அதன் உளம்புகுந்து சோகம் அறிய !
முடியுமா உன்னால் !
என்கிறது வேகமுறும் காற்று !
பனித்திரளை துகளாக்கி !
வீசியடிக்கிறது !
குளிர்கொண்டு அறைகிறது என் !
முகம் சிவக்க. !
போரின் இறப்பை !
கொத்திவரும் ஓர் செய்திக்காய் !
இந்தக் குருவியும் காத்திருக்கிறது! !
- !
(010302)

ரவி (சுவிஸ்)