பயணங்களின் கண்களில் படாமல்!
போர்வைக்குள் பதுங்கியிருந்தான் அவன்...!
ஓட அவனுக்கு விருப்பமென்றாலும்!
துரத்த எனக்கு விருப்பமில்லை...!
எத்தனை தூரம் அவன் ஓடினாலும்!
அவனுக்கு மூச்சிரைப்பதில்லை...!
ஆனால் என் பணப்பை!
மூர்ச்சையாகிவிடுகிறது...!
ஆக பலவீனங்கள் என் பக்கமென்றாலும்!
அவன் பதுங்கியே இருந்தான்...!
முடிவில் போர்வையை விலக்கினேன்!
நான் துரத்தவில்லையெனில்!
அவன் பதுங்கலில்!
விரைந்துவிடக்கூடும்
ராம்ப்ரசாத், சென்னை