வார்த்தைகளின் கைப்பிடி!
இறுகப்பற்றி!
ஊடல் கொண்ட மட்டும்!
உயர்த்திப்பிடித்து,!
பொய்க்கோபம் கொண்ட மட்டும்!
வேகமாய் வீசிக்!
குத்தினேன் உன் இதழ்!
தவறி விழுந்த!
சில பத்திகளை...!
தெரித்த வார்த்தைகளில்!
சில சொற்கள்!
மிக அழகாய் இருந்தது...!
தெரிக்காத வார்த்தைகளில்!
அழகை எதிர்பார்த்து!
மீண்டும் குத்த!
எத்தனிக்கையில்!
ஒரு வார்த்தையின் பின்னே!
ஒளிந்து கொண்டாய்...!
போட்டிக்கு நானும்!
இன்னோரு வார்த்தையின்!
பின்னே ஒளிய,!
ஒவ்வொரு வார்த்தையாய்!
நீ என்னையும்!
நான் உன்னையும்!
தொடர்ந்து தேடித்தேடி!
எண்ணிக்கையில் பல நூறைக்!
கடந்து கொண்டிருக்கிறோம்!
நமக்குள் நாம் பகிர்ந்துகொண்ட!
இப்படியான தேடல்களை
ராம்ப்ரசாத், சென்னை