அவசரத்தேவை!
வேறு வழியேயில்லை.!
தேடிச் சென்ற நண்பன்!
நாசூக்காய் கைவிரிக்க..!
உறவுகள்!
உதட்டைப் பிதுக்க..!
பழகிய சில இடங்களில்!
'பழைய பாக்கியே இன்னும்..'!
என இழுக்க..!
ஏதோ ஒரு பேருந்தில்!
ஏறி அமர்ந்தேன்.!
நல்லவேளையாய்!
காசு இருந்தது டிக்கெட்டுக்கு.!
நெஞ்சு வெடித்து!
விடக் கூடாதென!
அஞ்சு வரி அதன் பின்னே!
நுணுக்கி எழுதி!
'அவமானம்'!
எனத் தலைப்பிட்டேன்.!
அழகாய் வந்திருக்க!
ஆறியது சற்றே மனசு..!
கைமாத்தாகக் கவிதையாவது!
கிடைத்ததே என்று.!

ராமலக்ஷ்மி