முதல் தேதிகளில்!
கவலைகளை!
மறக்க எண்ணி..!!
ரயிலோ!
பஸ்ஸோ!
நெரிசல்களில் சிக்கி!
வேலைக்கும் வீட்டுக்குமாக!
தினசரி அல்லல்கள்..!
மாதம் பிறந்துவிட்டது!
பாலுக்கும் அரிசிக்கும்!
பாக்கி போக!
மிச்சப்பட்டிருப்பது!
விரல்கள் மட்டுமே!
தினசரி!
விடிகிறது பொழுது!
கழிகிறது நிமிஷ்ம்!
காலம் என்ற ஓட்டைப்பானையில்!
உயிர் சிந்தி!
உழைப்பைக் கொட்டி!
தொலைந்துபோகிறது!
வாழ்க்கை

பாரதிமோகன்