இன்னொரு பிறவி எடுப்பார்கள் இவர்கள்..!!
பட்டடினி அறிந்து!
பசி உணர்ந்து!
பரி தவிப்பதற்காகவே!
இன்னொரு பிறவி எடுப்பார்கள்!
பகலென்றும் இரவென்றும் காணாது!
போராடி பொடி பொடியாய்!
சேர்த்ததெல்லாம்!
பசிக்கும் வயிற்றுக்கு போக!
வெற்று கையில்!
விரலே மிச்சமென்று!
ஜென்மம் முழுக்க!
ஏங்கி தவித்திருப்பார்கள்!
கொளுத்தும் வெயிலோ!
கொட்டும் மழையோ!
உழைத்துக் களைத்தாலும்!
மிச்சம் தேடி…!
உறக்கம் அறியாது!
உயிர்த்திருப்பார்கள்…!!
ஒரு நாள் வலி கொண்டு!
விழி துடித்து!
துயில் கொள்ளும் போது…!
கனவு வந்து நினைவுபடுத்தும்!
முன் ஜென்மத்து நிகழ்வுகள்…!
அரசு ஊதியம்!
வெட்டி அரட்டை!
அதிகார தோரனை!
இவற்றுக்கிடையே..!
ஆயிரமாயிரம் சலுகைகளோடு!
எட்டிப்பார்த்த பணி…!
மிச்சப்பட்டது!
கேள்வி குறியோடு!
இன்னொரு பிறவியில்…
பாரதிமோகன்