எரிந்துகொண்டு இருக்கிறேன்!
என்மீது ஏவப்பட்ட வார்த்தைகளால்!
நொறுங்கிக்கொண்டிருக்கும் கணத்தில்!
எங்கும்!
பரவிக்கொண்டிருககும் வலியை!
கண்கள் வடித்துக்கொண்டிருக்கிறது!
மொத்தமும் பெரும் புறக்கணிப்பில்!
மரணத்தின் வாசல் திறந்தே கிடக்கிறது!
மரணமும் ஏதுவாகிறது!
சலிப்புகள் வெளிவேறாக பாவித்தாலும்!
நாட்குறிப்புகள் போல ஒன்றன்பின் ஒன்றாக!
காத்து நிற்கின்றன!
கனவுகள் தீர்ந்தபாடில்லை!
நினைவெங்கும்!
நெளிந்துகொண்டும் கனன்றுகொண்டும் இருக்கிறது!
தேடல்கள் இழப்புகளை நிறைவுசெய்கின்றன!
ஏதுமில்லாதது போல் இருந்தும்!
எதன்பின்னால்!
வாழ்க்கையும்!
நானும்.!
கவிதை: அறிவுநிதி
அறிவுநிதி