எப்போதும் சிரிப்பாயே!
இன்று மட்டும் என்ன!
நீ கேட்ட!
வண்ணாத்திபூச்சியையும்!
நாய்குட்டியையும்!
அப்பா வாங்கித்தரவில்லையா!
அதனால் என்ன!
உனக்கு பிடித்த வண்ணங்களில்!
உன்மொழியான விரலசைவில்!
வண்ணாத்திபூச்சியையும்!
நாய்குட்டியையும் வரைந்துகொடு!
அப்பாவின் தலையணையடியில்!
நாம் பத்திரப்படுத்தலாம்!
வரக்கூடிய கனவில்!
உன் ப்ரிய நாய்குட்டி!
அப்பாவுடன் விளையாடத் தொடங்கலாம்!
தொடர்ச்சியாய் பறந்துவரும்!
வண்ணாத்திப்பூச்சியை எட்டிப் பிடிக்க முயற்சித்தபடி!
இவையெல்லாம் உன்னாலானது என!
அப்பாவிற்கு தெரியாது!
பிறகொருநாள் நீ கதைகேட்கும்போது!
நாய்குட்டி எட்டிப்பிடித்த பட்டாம்பூச்சியென!
சொல்லக்கூடும்!
ரசிப்பதாய் நினைத்த!
உன் ரகசிய புன்னகையை கடந்தபடி!
!
-பாண்டித்துரை
பாண்டித்துரை