அடி அர்த்தங்களற்ற…!
சுய பச்சாபமற்ற…!
வெற்று நினைவுகளில்!
‘அநாதை' என்ற நிலையை!
தவிர்க்க முடியவில்லை…!
தண்ணீரில்!
மண் கலங்க ஒரு நிறமும்!
நிழல் விரிக்கும் மேகங்களால் ஓர் நிறமும்!
சந்தித்த அதிர்ச்சியிலிருந்து..!
விடுபட!
நீண்டநாளாகாத நிலையில்!
காற்றில் மூடிய திரைகளின் வீக்கத்தில்!
வேதனை உருவெடுத்து!
நொதித்து வியர்வையாகிறது…!
உணர்வின்றி விலகி மிதப்பதை!
இயலாமையோடு வெறிக்கிறான் மனிதன்…!
மனிதன் பிறப்பதற்கு முன்!
எங்குமே இல்லை!
இறந்த பின் தென்படாமலே போகிறான்…!
நடுவில் மட்டும் நிகழ்கின்ற செயல்கள்!
உண்மையானதாகவோ நிரந்தரமானதாகவோ இல்லை!
நகர்கிறது காலம்….!
இந்தப் பாடலைப் போலவே முடிவு இல்லாது…
நவஜோதி ஜோகரட்னம்