துக்கம்!
தொண்டையைத் துளைத்து!
மண்டையோட்டைப் பிளக்கிறது!
குளிரும் கறுப்பும் உருண்டு என்!
கட்டிலில் குவிகிறது!
நடுக்கம் உடலில் கசிய!
பல்லிகள் இல்லாத!
என் வீட்டுச் சுவர்கள்!
பல்லிளித்துச் சிரிக்கின்றது…!
என் விரல்கள்!
கூம்பிய மொட்டுகளாகி!
மனதோடு உணர்வு புணர்ந்து!
என் இதயத்தின் வால்வுகளை!
நன்றாகச் சுருங்கிவிட்டது!
வேதனையால்!
மயக்கமும் வெப்பமும் அதிகரித்து!
என்!
எலுப்புகளும் களைத்துவிட்டது!
தீப்பொறியாய் மின்னி மடிந்த!
என் தேசத்தின் மக்கள்…!
அந்த வன்னி மக்களின்!
பெருங்குரல்வளைகள்!
என்னை இறுக்கிப் பிழிந்து!
உலர்ந்த பொருளாக்கிவிட்டது!
பொய்யுக்குள் உலவுகிறது!
ஒரு சுதந்திரம்!
அழுதழுது!
கவிதை எழுதும் இரவே!
எனக்கு இனி வராதே!!
கத்துகிறது என் கவிதை!
என் தாயே!!
எடுத்துப் படி!
கருகிய உடல்களை வெண்மையாக்கி!
கவிழ்த்து மூடிய அந்த!
வன்னி தேசத்தின் மணற்பரப்பை… !
7.6.2009
நவஜோதி ஜோகரட்னம்