குத்தும் குளிரிலும் - என்!
குருதி மிதமான சூடு!
உரிமையிழந்த மண்ணின்கோலம்!
பார்வையில் படியும்போது!
உடல் இறுகி உதிரம் உறைகிறது!
சரித்திர வட்டத்தில்!
நெருப்பு இடி பூகம்ப வெடிகள்…!
மூடாத குழிகளில்!
அம்மா அப்பா மட்டுமன்றி!
ஐயோ எம்!
எதிர்காலச் சோளக் கதிர்களெல்லாம்!
சிதறிப் போய்க்கிடக்கிறது…!
இளவேனில் மழைத்தூறல்!
சிவப்பாகி பெருக்கெடுக்கிறது…!
இரும்பு இதயங்களின் வேற்றுமை படர்ந்து!
மண்ணும் வெடுக்கெடுக்கிறது…!
இனவாதச் சகதிக்குள் மனிதக் கருகல்கள்…!
மனிதத்துக்குக் கண்ணீர் அஞ்சலி!!
நாமோ மண் எங்கும் ஓடுகின்றோம்…!
கனத்து கரைந்து கசக்கிறது காலம்…!
எரிகிறது இதயம்…!
ஒளி செத்த தேசம்…!
சிவப்பாகும் கோபம் உங்களை திரட்டி விழுங்காதா? – எம்!
குருதியைச் சீராக்கி!
சிரிப்பைக் கண்டெடுத்து!
சுதந்திரம் விரைந்து விரைவில்!
மாலைகளாய் எம்!
கழுத்தில் வீழாதா?...!
-நவஜோதி ஜோகரட்னம்!
லண்டன்.!
2.2.2009
நவஜோதி ஜோகரட்னம்