அகலத்துக்கும்!
அன்பைப் போதித்த அன்னையே!!
மனிதக் குவியல்கள்!
மடிந்த!
எங்கள் பூமிக்கு வா… !
அல்லலுற்று !
அளவு கணக்கின்றி!
அழிவுக்கு ஆட்பட்டு!
அகதிகளாய் அலைந்து!
அவதிப்படும் ஆத்மாக்களை !
சேர்த்தணைக்க!
எங்கள் பூமிக்கு வா…!
அப்பாவிகளை !
புல்டோசர் கொண்டு !
அரைத்துப் பார்த்தது!
எங்கள் பூமிதான்!
உடைப்பதற்கென்றே !
உருவெடுத்த!
உருவங்களைப் பார்க்க!
எங்கள் பூமிக்கு வா… !
புதைக்க நேரமில்லாத!
புழுத்துப்போனது தேசம்!
பூவாடை இன்றி!
பூக்கள் கருகி !
இன்றும்!
ரத்த வாடை வீசும் !
பாலைவனத்தை பார்ப்பதற்கு!
எங்கள் பூமிக்கு வா… !
திரைமறை நாடகங்கள் !
திசை யாவும் சூழ்ந்துவர!
நச்சுப் புகை வந்து!
நசுக்கியதை அறியாயோ!!
பீரங்கி வேட்டுக்கு இனி ஒரு!
பிஞ்சுடம்பும் வேண்டாம்!
ராட்சத சூரியன்போல்!
எங்கள் பூமிக்கு வா…

நவஜோதி ஜோகரட்னம்