குளிரில் நடுங்கிய!
பூனையின் முனகலாய்..!
எவரோ வீசிச்சென்ற!
ரொட்டித்துண்டுகளை தரையில் பரப்பி...!
வாழ்க்கையையும் ,!
ரொட்டித்துண்டுகளையும்,!
தேடித் தேடிச் சாப்பிட்டு...!
அழுக்குத்துணியில்!
தன்னையும் ..!
தன்மானத்தையும்...!
போர்த்தியபடி கிடக்க,!
உற்று நோக்கினேன்..!
மனசின் ஓரத்தில்!
மதப்பற்று!!
மத அடையாளம் தெரியவில்லை!!
இந்தியனாய் இருக்க கூடுமோ..?!
தேசப்பற்று..!
திமிறிக்கொண்டு வந்தது!!
தமிழனாய் இருக்குமோ?!
மொழிப்பற்றும் மீறி வந்தது!!
!
வேலை தேடி வந்து..!
வீதியில் நிற்பவனா?!
விசா எடுத்தவன்..!
விரட்டி விட்டிருப்பானோ..?!
!
விசாரித்தால்!
ஏழ்மை ஒட்டிக்கொள்ளுமென்ற அச்சத்தில்!
மனிதம் தவறியபடி..!
மனிதர்களின் அவசரங்கள்!!
மனசாட்சியினை!
பணங்களின் தேவைகள்..!
பறித்துவிட்டனவே!!
மனிதத்தை!
மண்ணெண்ணையில் எரித்துவிட்டு..!
சுயநலங்கள்!
சாப்ட்வேரில் சமாதியாகின்றது!!
பாவிகளா!
எவனுமே விசாரிக்க மாட்டீர்களா..?!
கதறுகிறது நெஞ்சம்..!
நான் எங்கே போனேனோ..?!
!
காட்டுமிராண்டிகள் எல்லாரும்..!
கவனிக்காமல் செல்லுகின்றனர்!!
!
இந்த!
காட்டுமிராண்டியால் முடிந்தது!
ஒரு கவிதை மட்டுமே..!
நானும் மனிதனாவதெப்போது..?!
!
- ரசிகவ் ஞானியார்!
-- !
K.Gnaniyar!
Dubai
ரசிகவ் ஞானியார்