அதிகாலை !
-------------------------------------------------!
!
மனசு இயல்பற்றிருக்கும் இந்த!
அதிகாலைப்பனிப்பொழுதில்!
சடுதியாய் கண் விழித்து!
எதைப்பற்றி எழுதுவது...??!
திரும்பத்திரும்ப என் மனம் நனைக்கும்!
உனதான பிரிவின் மீள முடியாப்பெருந்துயரம்!
ஒரு பாம்பைப்போல என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது..!
பிரக்ஞையற்றுப்போன உனது இருத்தலின்!
தொலைந்து போன புள்ளியில்!
எனது உயிர் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது...!
காலத்தின் மீது எனது வெறுப்பை!
துரிதமாக எறிந்து கொண்டிருக்கிறேன்..!
அதுதானே உன்னை எங்கேயோ!
என்னை எங்கேயோ..!
நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது...?!
விடையேதுமற்ற பல்லாயிரம்!
வினாக்களை சுமந்தலையும்!
ஒரு ஒற்றைப்பறவையின் ஏகாந்த ஏக்கங்களென!
எனக்குள் மட்டும் அதிர்ந்தடங்கும்!
உன் பிரிவின் ஆற்றாமையை!
இன்னும் எப்படியெல்லாம் நானுரைப்பேன்..??!
உன் பற்றியெழும் சுகமான நினைவுகள்!
காட்டுத்தீயென கண்டபடி என்னை!
சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி கருக்கி....!
அடிக்கடி என்னைத்துயிலெழுப்பும்!
உன் நினைவுகள் நனைக்கும் இந்த அதிகாலைப்பொழுதில்!
வெளியே பொழிந்து கொண்டிருக்கும்!
தூறல் மழையை கொஞ்சமேனும் ரசிக்க விடாமல்!
உலுக்கி எடுக்கிறது உனதான அத்தனையும்...!
சிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்!
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்!
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்....!
-நிந்தவூர் ஷிப்லி

நிந்தவூர் ஷிப்லி