நினைவிருக்கிறது!
வீதியெங்கும் விளையாடி!
நண்பரோடு அலைமோதி!
மகிழ்ச்சி வானில் சிறகடித்து!
பள்ளி வாழ்வை அனுபவித்த!
அந்த இனிய நாட்களெல்லாம்..!
துன்பமென்று ஏதுமில்லை!
பாரமென்று ஒன்றுமில்லை!
கண்ணீர் என்றால் தெரியாது!
கஷ்டம் என்றால் புரியாது!
வாழ்க்கை என்ற நதியினிலே!
ஒரு நொடியும் நில்லாமல்!
ஓடம்போல ஓடியிருந்தோம்..!
நண்பனின் தாய் நமக்கும் தாய்!
நமது தாய் நண்பனுக்கும் தாய்!
ஒற்றுமையில் பற்றி நின்ற!
இனிப்பான நாட்கள் அவை..!
பள்ளிக்கூடம் அலுப்புத்தான்!
பாடங்களும் அலுப்புத்தான்!
கற்பிக்கும் ஆசான்களும்!
அவ்வப்போது அலுப்புத்தான்!
சடுதியாக அடி விழும்!
எப்போதும் திட்டு விழும்!
என்றாலும் ஒரு நாளும்!
ஆசான்களை வெறுத்ததில்லை!
பள்ளிக்கூட நிமிடங்கள்!
நெருப்பாகத்தகித்தாலும்!
பள்ளிக்கூடம் செல்லாமல்!
ஒருநாளும் இருந்ததில்லை!
எதிர்காலம் பற்றியெல்லாம்!
ஒருபோதும் நினைத்ததில்லை!
நிகழ்காலம் என்ற ஒன்றே!
வாழ்வோடு நிறைந்திருக்க..!
சித்தப்பா சின்னம்மா!
பெரியப்பா பெரியம்மா!
மூத்த மாமா மூத்த மாமி!
சின்ன மாமா உம்மம்மா!
என்றெல்லாம் உறவுகளோடு!
கூடிக்களித்தோமே..!
பொற்காலம் என்றால் அது!
அக்காலம் மட்டும்தான்.!
காலை எழுந்தால் பள்ளிக்கூடம்!
மாலை வந்தால் மைதானம்!
இரவு வீட்டில் பள்ளிப்பாடம்!
மீண்டும் காலை பள்ளிக்கூடம்!
பணமெல்லாம் பெரிதில்லை!
பாசம் மட்டும் போதுமென்று!
எல்லோரும் அரவணைத்த!
இனிப்பான காலங்கள்!
இனி மீண்டும் வாராதா?!
உண்மை இன்பம் தாராதா?!
காலத்தால் அழியாத!
நாட்கள் அதை நினைக்கையிலே!
கண்களோடு மனசும் சேர்ந்து!
கண்ணீர் மழை பொழிகிறதே..!
அவசர வாழ்க்கை!
விரையும் உறவுகள்!
நில்லாத சந்தோசம்!
தினந்தோறும் போராட்டம்!
இது ஏதும் இல்லாமல்!
பழைய நாளில் நாம் கண்ட!
அதே அப்பா இன்றும் வேண்டும்!
அதே அம்மா மீண்டும் வேண்டும்!
அதே பள்ளி வாழ்க்கை இங்கே!
நில்லாமல் தொடர வேண்டும்..!
அதே நண்பர் வட்டம் இன்றும்!
அதே போன்றே இருக்க வேண்டும்!
ஓடித்திரிந்த வீதிகளில்!
மீண்டும் கால்கள் ஓட வேண்டும்!
பாடித்திரிந்த நாட்களைப்போல்!
சந்தோசம் நீள வேண்டும்..!
இவ்வாசை அத்தனையும்!
ஆதங்கம் என்றாலும்!
இவ்வாசை நிறைவு கண்டால்!
அது போதும் எப்போதும்..!
வலியில்லா வாழ்க்கை அது!
முடிவில்லா வேட்கை அது!
பொற்காலம் என்றால் அது!
அக்காலம் மட்டும்தான்
நிந்தவூர் ஷிப்லி