புதிய நாள் புலர்கையிலே!
புதிது புதிதாய் கற்பனைகள்!
அந்தி மாலை மலர்வதற்குள்!
அடுத்தடுத்து படுகொலைகள்!
மூபத்து அகவைகளாய்!
மூடப்பட்ட உரிமைகள்!
எல்லோர்க்கும் சொல்வதற்கு!
இல்லை இங்கே உவமைகள்!
வலிகளுக்குள் உறைந்து போனோம்!
வழிகளற்ற பயணமடா !!
அடுத்த திசை மறந்து போனோம்!
அநேகம் அத மரணமடா !!
அவலங்களும் அழுகைகளும்!
எஞ்சி நிற்கும் சொத்தாச்சு!
சத்தமிட்டு கதறியழும்!
சுதந்திரமும் ரத்தாச்சு!
நாய்களும் பேய்களும்!
நல்லவராய் நடிக்கிறது!
உப்பிலிருந்து கற்பு வரை!
அத்தனையும் கடிக்கிறது!
பத்தோடு பதினொன்றாய்!
பயந்த காலம் கொளுத்திடுவோம்!
கைகளெல்லாம் துணிந்தபின்னே!
கயவர் தலை அறுத்திடுவோம்!
பொறுமைகள் கொதித்தெழுந்தால்!
பூமியினி தாங்காது!
சிறுமைகள் களைத்தெறிவோம்!
சிலுவைகள் இனியேது ?!
தடையுடைத்து புறப்படுவோம்!
தடுமாற்றம் தேவையில்லை!
அடக்குமுறை அறுத்தெறிவோம்!
அதன்பின்னே வேலையில்லை!
வெகுண்டெழுவோம் நண்பர்காள்!
வாருங்கள் ஒன்றிணைவோம்!
இழந்துவிட்ட உரிமைகள்!
அத்தனையும் அன்றே அடைவோம்!
-நிந்தவூர் ஷிப்லி!
தென்கிழக்குப்பல்கலை!
இலங்கை
நிந்தவூர் ஷிப்லி