கல்லூரி முடிந்து கால்நடையாக நடந்தேன்
நண்பர்கள் விடைபெற விளைந்தது வீட்டு நியாபகம்
அன்பான அம்மாவிடம் அடம்பிடிக்க தாடி
வளர்த்த தந்தையுடன் தகதிமிதா ஆட
என்று எண்ணிக்கொண்டே ஏறினேன் பேருந்தில்
குளிரிந்த காற்றால் என்மேனி சிலிர்ததால்
கண்ணாடி ஜென்னல் காலவரையின்றி மூடப்பட்டது
அழுகை குரலொன்று என்னருகிலிருந்து வந்தது
என்னென்று வினவினால் எதுவும் சொல்லவில்லை
புலம்ப ஆரமித்தான் பூஉம் கசிந்தது
அம்மா யென்றான் அப்பா என்றான்
ஒன்றும் விளங்கவில்லை எனக்கு ,உன்
அம்மா எங்கே என்றேன் ,மேல்நோக்கினான்
உன் அப்பா எங்கே என்றேன் ,அதற்கும்
சிரிதும் யோசிக்காமல் வான் நோகின்னான்
அவன் புலம்பல் எனக்கு புலப்பட்டுவிட்டது
அதன்பின் என் புன்னகையோ புதையுண்டுவிட்டது
பேருந்து நடத்துனர் விசில் விடவே
நான் கால் ஊன்றி இறங்கினேன்
அவனோ கம்பூன்றி இறங்கினான்
ஏனடா யென்றேன் இலங்கை இராணுவமென்ன்றான்
நீ யாரட யென்றேன் இலங்கை தமிழன் என்றான் ......
மு.வெங்கடேசன்