மெழுகுவர்த்தி
தொழிற்ச்சாலை நோக்கி
மெல்ல நடந்தேன்
தொழிற்ச்சாலை வாயிலில்
மெழுகுவர்த்தி அடைப்பான்கள்
மாநில மாநிலமாக
ஏற்றுமதி செய்யபட்டுகொண்டிருந்தன
அதிலிருந்து
தவறி விழுந்த ஒரு
மெழுகுவர்த்தி என்
தரைபட்ட பாதத்தை தட்டியது
நான் ஒரு
கவிஞன் என்பதால்
உருகும் மெழுகுவர்த்தியுடன்
என் உரையாடலை
தொடர முடிந்தது
தவறி விழுந்த
மெழுகுவர்திடன் உன்
கூட்டாளிகள் ஏற்றுமதியாகும் போது
நீர் மட்டும் ஏன் ஏற மறுக்கிறாய்
என்றேன்
உடனே அந்த
மெழுகுவர்தியோ நான்
ஏற்றுமதியாகும் இடம்
தமிழ்நாடு என்றது
அத்துடன்
அங்கே என்
சகோதர சகோதரி
மெழுகுவர்த்திகள் " மின்வெட்டு "
காரணத்தால்
இலங்கை தமிழர்களாய்
அழுதுகொண்டே இருக்கிறார்கள்
என்றது .
அதை கேட்டதும்
மெழுகுவர்தியுடனான
எனது உரையாடல்
உருகிப்போனது ........
மு.வெங்கடேசன்