மதத்துபோன மத்தாப்பு - மு.வெங்கடேசன்

Photo by Visax on Unsplash

 
பள்ளி சிறுவன் பாஸ்கரன்
பட்ட பகலில் பாதம்தேய
பயணம் செய்தான் பாவமாக

சென்ற வழியில் சிறப்பு
உயர் நீதிமன்றம் இருக்க
வந்தது நியாபகம் வக்கீலான
தன் தந்தை என்று

தீபாவளி என்பதால் தின்பண்டங்களின்
கூடாரம் குறையாது இருக்க
குலோதுங்கநனா அப்பாவுடன் வந்து
குலோபஜம் வாங்கியது  நியாபகம்

இப்படி நெஞ்சில்  நினையுகள்
நீங்காது வந்து செல்ல
வீடும் வந்துவிட்டது விரைவாக

அங்கு புகையலை போடும்
அப்பாவிற்கு பதிலாக அவரின்
பூசூடிய புகைபடமே இருந்தது

அப்பொழுது தான்  தெரிந்தது
வாய்தா கேட்ட வக்கீலுக்கு
வாய்கரிசி போடப்பட்ட  தென்று

அங்கே  உறவுகள் உதறிய
இனிப்புகள் இரங்கள் தெரிவித்தன
பக்கத்து வீ ட்டார் பலகாரங்கள்
பலாத்காரம் செய்யபட்டது போல்
நூறாக நொருங்கி கிடந்தன

அங்கே
மத்தாப்பு  சத்தத்துக்கு பதிலாக
ஊதுபத்தியின் ஒப்பாரி சத்தம்தான்
கேட்டது .

இதற்கு புகையலை புற்றுநோயும்
அலர்ஜியான ஆஸ்துமாஉம்  காரணமில்லை
ஜகோட்டில் வெடித்த   அணுகுண்டும்
தீவிரவாதிகளின் தீராத செயலுமேதான் .

என்று தனியும் தீவிரவாதம் .............
 
மு.வெங்கடேசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.