என் இதயம் ஒரு
அலெக்ஸ் பால் மேனன்
அதை திருடி சென்ற
மாவோயிஸ்ட் நீ
உனக்காக காத்திருக்கையில்
என் மனமோ வேலூர் வெயிலாய்
எரிந்தது
உன்னை பார்த்தபின்தான்
ஊட்டி மலர் கண்காட்சியை
குளிர்ந்து
இறந்தபின் வருவது
இடைத்தேர்தல்
அது புதுக்கோட்டை
இறவாத நம்
காதலுக்கு இடையே ஏது தேர்தல்
அது காதல் கோட்டை.
உனக்கும் இருவது
எனக்கும் இருவது
இது அல்லவா ஜபியல்
ட்வென்டி ட்வென்டி ......
அதை கண்கள் என்னும்
தொலைக்காட்சிதான்
ஒளிபரப்புகிறது
இது பெண்ணை காதலித்தால்
வரும் கவிதை அல்ல
கவிதையை காதலிப்பதால்
வரும் கவிதை ......
"சூழ்நிலை கவிதை"
மு.வெங்கடேசன்