பிரபஞ்ச பெருவெளியில்!
நம் தேசம் சபித்த ஓர்!
பொழுதில்!
அமானுஷ இரவுகளில்!
நித்திரை நிராகரித்த!
கண்கள்!
வழக்கமற்ற பகல்!
தூக்கத்தில்!
விசித்திர கனவெனக்கு!
வேற்றுக்கிரகத்திலிருந்து!
பல பறக்கும் தட்டுக்கள்!
நம் தேசம் நோக்கி வந்தன!
அதில்!
முகமூடி சப்பாத்து!
குருதி பருகும் ஒரு புது வகையான!
ஆயூதமென!
சில தடடுக்கள்!
நிரப்பப்பட்டிருந்தது!
கனவிலும் ஆச்சியமெனக்கு!
பல தட்டுக்களில்!
முற்றுமுழுதாக!
கிறிஸ் கொண்டு நிரப்பியிருந்தது!
இன்னும் சிலவற்றில்!
பாதி மனிதன் கலந்த!
புது சிருஷ்டிப்புக்கள்!
இருந்தன!
பெயர் சொல்ல தெரியவில்லை!
எனக்கு!
இன்னும் சில பறக்கும்!
தட்டுக்களில்!
சீருடைகளும்!
அடையாளம் காணாத வகையில்!
வெள்ளை நிறத்தில் சிலவூம்!
இருந்தன!
அது வெள்ளை வான் ஆகத்தான்!
இருக்கனும் போல!
கனவின்!
கடைசிக்கட்டத்தில்!
நான்!
கைது செய்யப்பட்டிருந்தேன்!
காரணமென அலரிய ஆபோது!
நாட்டில் மர்ம மனிதர்கள் என!
வதந்தி பரப்பினேனாம்
முஹம்மட் மஜிஸ்