உயிரணு இரண்டும் உறவாடி உருவான!
உன்னத அன்பின் உண்மை பொக்கிசமாய்!
அன்னை வயிற்றில் அனுதினம் வளர்ந்து!
அவளின் முகம் காண ஆயத்தம் ஆனவள்...!
கருவறைக்கோவில் தரிசனம் முடித்து !
கல்லறை வாயில் தன்னடி பதித்து...!
அன்னை ஊட்டிய காரணம் ஒன்றுக்காய்!
கல்லிப்பாளினை களித்திடும் குலமகள்!!
உயிர்ப்பிண்டமாய் உருகிடும் அவளும்!
உன்னைப்போன்ற பெண்ணே அன்றோ...!
ஆண் பெண் சமத்துவம் பேசிடும் இன்றோ!
பெண் சிசுவினை கொன்றிடல் நன்றோ?!!
ஆண் போல் பெண்ணை பேநிடல் வேண்டும்!!
அதை எற்காரை அழித்திடல் வேண்டும்!!!
கன்னிப்பெண்ணின் கற்ப்பைக்கூட!
காசாய் ஆக்கும் கயவர் கூட்டம்...!
கற்பின் கண்ணகி எதிரில் வரிணும்!
அவளைக்கூட விலைக்குக் கேட்கும்!!!
உயிர்ப்பிண்டமாய் உருகிடும் அவளும் !
உன்னைப்போன்ற பெண்ணே அன்றோ?...!
ஆண் பெண் சமத்துவம் பேசிடும் இன்றோ!
பெண் சிசுவினை கொன்றிடல் நன்றோ?!!
கள்ளும் கொலையும் களவும் கற்று!
கடமையை எல்லாம் காற்றில் விற்று...!
காசு கொடுத்தால் கடவுளைக்கூட!
பேரம் பேசி விற்கும் கூட்டம்!!
நட்பு கசிந்த அவரின் நெஞ்சம்!
பகைமை கொண்டு நசிந்து போக...!
சமத்துவம் என்னும் சொல்லின் சுவடோ!
சுடுகாட்டின் கண் பாதை காட்ட...!
தலைகள் எல்லாம் தரையில் உருள...!
தாண்டவம் ஆடுது தீவிரவாதம்!!
உரிமை உரிமை உரிமை என்று!
உரக்கப்பேசிடும் உன்னத நண்பா...!!
மண் பொன் ஆசையை நீயே கொள்வாய்!!
கொஞ்சம்...!
இப்பெண்ணவள் ஆசைக்கு விடியல் தருவாய்...!!!!
ரஞ்சினிமைந்தன், திருப்பூர்