மிகவும் களைத்துவிட்டீர்கள்
நீங்கள் வெறுக்கும் என் கசந்த பிம்பத்தை
என்னிடம் திருப்பிக் கொடுங்கள்
பதிலுக்கு நான்
என் நல்லுணர்ச்சிகளின்
இனிய பிம்பமொன்றை
மாற்றித் தருகிறேன்
பிம்பங்களுக்கு அப்பால்
உங்களுக்கு நானோ
எனக்கு நீங்களோ
யாருமே இல்லை
மனுஷ்ய புத்திரன்