மழையில் ஒருத்தி
ஈரத் தலையைத் துவட்டுகிறாள்
ஈர ஆடையைப் பிழிகிறாள்
ஈரக் குடையை உதறுகிறாள்
ஈரக் கைகளைத் தேய்த்துக் கொள்கிறாள்
ஈரத்தைத் தாண்டிக் குதிக்கிறாள்
ஈரத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறாள்
தான் தான்
இந்த மழையை
ஈரமாக்குகிறோம்
என்றுணர்ந்த ஒரு கணத்தில்
சிரித்துக்கொண்டே
மறுபடியும்
மழையில் இறங்கி நடந்து போகிறாள்
மனுஷ்ய புத்திரன்