நினைவுகளைத்!
துரத்திச் செல்லும் இரவுகள் !
இலக்கின்றிப் பயணிக்கும்!
உன்!
பிஞ்சு மனதிலே!
தஞ்சம் கேட்டு !
நித்தம் சண்டை பிடிக்கும்!
பசியில்லாப் பகல்களும்!
பட்டிணி இரவுகளும்!
பழகிப் போகும்!
பல்லியிடம் வீசியெறிந்த !
உன் முதல் பல் !
என் காதல் கருவூலத்தை!
அலங்கரிக்கும்!
உனக்குள் கட்டமைத்த !
வாழ்க்கைச் சுனையில்!
என் வேர்கள் நீர்தேடும்!
இருந்தும்..!
தவறுகளின் பட்டியலால்!
மலடான நம் காதல்!
உன்னொரு !
புன்னகையால் மட்டுமே !
மீண்டும் பூப்பூக்கும்!
மன்னார் அமுதன்