எல்லாவற்றிற்கும் நாட்களுண்டு!
அன்னையர் தினம், காதலர்தினம் போல!
அழுவதற்கும் சிரிப்பதற்கும் கூட!
தினங்களுக்கிடையில் !
சிக்கிக் கிடக்கிறோம்!
உறவினரின் மரணவீடொன்றில்!
குமுறிக் குமுறிக் அழுதாலும்!
கண்ணீர் வருவதில்லை !
அது அழுவதற்குரிய நாளாயிருப்பதில்லை!
நகைச்சுவையைக் கேட்டவுடன்!
சிரிக்க முடிவதில்லை...!
சிரிப்பதற்குரிய நாள்!
மாதத்தின் இறுதிச் சனிக்கிழமை!
சிரிப்புமன்றத்தில் குறிக்கப்பட்டிருக்கும்!
காணாமல் போன சகோதரனைத் தேடவும்!
காலம்போன கவிஞனுக்கு அஞ்சலி செய்யவும்!
ஒருநாள் ஒதுக்கியிருக்கிறோம்...!
உக்கிரமான கவிதைகளுக்கான நாளாகவும் !
அவற்றைக் குறித்துக்கொள்ளலாம்!
ஒதுக்கப்படாத நாட்களில் !
எதிர்பாராமல் வந்துவிடும் நாட்கள் கூட!
அன்றாடத்தைக் குலைத்துவிடுகிறது..!
எரிச்சலை அள்ளி எல்லாவற்றின் மேலும் கொட்டுகிறது...!
குறிப்பேட்டின் நாட்களெல்லாம் !
நிகழ்ச்சிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றன ....!
எல்லாவற்றுக்குமொரு நாளை நானும் குறித்துவைத்திருக்கிறேன்...!
எனக்கென்றொரு நாளையும் உங்களில் யாராவது குறித்து வைத்திருக்கலாம்!
மன்னார் அமுதன்