உன் நினைவோடு நானிங்கு.. அவளும் எச்சிலிலையும்...!
!
01.!
உன் நினைவோடு நானிங்கு!
------------------------------- !
நீயங்கு..!
நானிங்கு..!
நாம் வாழும் வாழ்க்கையின்!
முகவரி வெவ்வேறு!
உணர்வுகள் உளறலாய்!
வெளிப்படும் இரவுகள்!
கழிவது எவ்வாறு!
பறக்கும் இறகினுள்!
முகம் மறைத் தழுதிடும்!
பறவையைப் பார்த்தாயா…!
நானும் அதுபோல்!
அழுதுடும் காட்சியைப்!
பார்த்தால் ஏற்பாயா…!
கானல் நீராகா!
வாழ்க்கையில் சேர்வோம்!
ஒன்றாகும் நேரம்!
கனவிலும் வாழ்வோம்!
கரம் பற்றி!
நான் அணைப்பேன்!
காத லினால்!
நீ நனைப்பாய்!
உன்னில் வாழும்!
நாட்களிலேதான்!
உவகை கொள்கின்றேன்!
உயிரே உன்னைச்!
சேர்வதற்காக!
உலகை வெல்கின்றேன்!
!
02.!
அவளும் எச்சிலிலையும்...!
-----------------------------!
என்றோ.... !
எவனோ வீசிய!
எச்சில் இலைகளைத் !
தின்று உயிர்க்கும்!
பிச்சைக்காரி!
“பாவம்,!
தின்னட்டும்” !
குரல் கொடுக்கும்!
கனவான்கள்!
உண்டதைத் தின்று!
மீந்ததை ஈந்து!
சில நாய்களோடு !
சொந்தம் சேர்வாள்!
நன்றிப் பெருக்கால்!
நாய்களும் பின்செலும் !
இருளைப் போர்த்தியவள்!
உறங்கும் இரவுகளில்!
நாய்கள் துணை தேடித்!
தெருவிற்குள் செல்லும்!
குப்பை மேட்டில்!
வெறித்த கண்களால்!
அவள் கிளிந்த உடைகளுள்!
எதையோ தின்று கொண்டிருப்பான்!
இலை வீசியவனும் ...!
குரல் கொடுத்தவனும்

மன்னார் அமுதன்