என்ன கொடும சார் இது !
தான் வாழ்ந்த மண்ணை
காப்பாற்ற நினைப்பவன்
நாட்டை காக்கும் பயங்கரவாதியாம்
தன்னை வாழ வைக்கும் தொழிலாளியின்
ரத்தத்தை உறிஞ்சும் முதலாளிவர்க்கம்
நாட்டை சுரண்டும் மிதவாதியாம்
அறிவு கண்ணை திறக்கும்
கல்வி கூடங்கள் அனைத்தும் தனியார் மயம்
கண்ணை நிரந்தரமாக மூடவைக்கும்
சாரயக்கடை அரசு மயம்
இலங்கை தமிழனை காப்பாற்ற முடியவில்லையாம்
தமிழையாவது காப்பாற்றலாம் என
செம்மொழி மாநாடாம்
என்ன கொடும சார் இது !
மணிமேகலை