சத்தமில்லாமல்
முத்தமிடும் காதல்
நமக்கு
சாத்தியப்படவில்லைதான்..
போர்முனையின்
இருட்டைக் கிழித்து
இன்னும்
ஒலிக்கின்றது
உன்
சண்டைக்குரல்!
வெடிகுண்டுகளின்
படுக்கையில்
விழுந்துகிடக்கின்றேன்
உன் விழிகளின்
தேடலில்
என் மொழிகளின்
தோல்வி
உன் உயிர்க்கிழித்து
நீ கொடுத்த
முத்தம்
ரத்தம் சிந்தும்
உதடுகளில்
எழுதியது
போராளிகள்
தோற்பதில்லை