ஏழை பணக்காரன் என்ற
பாகுபாடு இல்லை
இங்கே
அனைவரும் ஏழைகளே !
இடைவேளையின் போது
பஜ்ஜி , வடை வாங்கி வருவோம்
குருவுக்கு தொண்டு
செய்யும் சிறந்த சீடர்கள்!
சீருடை
புத்தகத்தில் வேறுபாடு இல்லை
கிழிந்து தான் இருக்கும்
மதிய உணவில் கூட
பேதம் இல்லை
சத்துணவில்(?!) தான் கூடுவோம்
இந்தி, ஆங்கிலம்
என பிற மொழிகளை
கற்காத பச்சை தமிழர்கள் நாங்கள்!
அட... சொல்லிக் கொடுக்க
ஆள் இல்லீங்க!
காலம் காலமாய்
எங்கள் இனம் மட்டுமே ஆதிக்கம்
செலுத்துகிறது இங்கே...
அரசுப் பள்ளிக்கூடம்
மணிமேகலை