இருண்ட நிலவின் கீழ் துவங்கியது
ஒர் இருள் வாழ்க்கை!
காதலின் மோகத்திலே அவன் திளைக்க
மோகத்தின் தாகத்தில் இவள் இருக்க
இருளின் கொடுமை இருண்டு விட்டது.....
இதோ! ஒரு கசப்பான உண்மை!
விலைக்கு விலை போனவளுக்கு
மழலை பெற ஆசை வந்து விட்டது போலும்!
சில நாட்களில்.......
விடியல் மலர்ந்தது!
கருவின் உயிர்
வெளியுலகம் காண பிறந்தது!
அவள் மடியிலே மழலைத் தவழ்ந்தது!
அலை கடலில் தத்தளிக்கும்
தன் வாழ்க்கையை
மகனெனும் ஒடம் கொண்டு
கரை சேர முயல்கிறாள்...
முடியுமா? தெரியவில்லை!
கருவிலே உரு கொண்டு பிறந்தவனுக்கு
உணவோடு உணர்வுகளையும்
ஊட்டி விட்டாள் போலும்!
ஐயோ பாவம்! அவளும் பெண் தானே!
தொப்புள் கொடியின் உறவினை உனர்ந்தவன்
"அம்மா" என்றழைத்தான்..
"அப்பா"...யார் என்று தெரியவில்லை.
அடையாளம் சுட்டப்படவில்லை...அவளால்!
அவனோ...உருவாக்கிய உறவை
தேடிக்கொண்டு இருக்கிறான்.
தலையெழுத்தை வித்திடும்
தலைப்பெழுத்து தெரியவில்லை அவனுக்கு!
அதனால் தானோ
அப்பிஞ்சு மலரை - இச்சமுதயாம்
நஞ்செனும் முட்களால் தைத்தது!
இதோ! அவளின் ஆசையால்..
அவனின் அலட்சியத்தால்
இவன் இலட்சியம் ஊனப்பட்டது!
"தந்தை" எனும் உறவில்...!
உடலில் குறையில்லை...
மனதில் சுமையில்லை...ஆயினும்
உறவில் ஊனப்பட்டான்.
விழியில் நீர் மல்க...பேசினான்...
உறவின் ஊனம்
என் உடலை சிதைக்கவில்லை
என் உள்ளத்தை சிறகிழக்க செய்துவிட்டது

மலர்