என் நெஞ்சத்தை கிழித்து எரிந்த
கண்ணாடித் துண்டுகள் தாம்!
ஆயினும்...இவை
மீண்டும் சேர்ந்தால்
மீண்டு பிறப்பேன்!
அவள் முகம் காண,,,
என் நினைவுகள்
சிறகிழந்த பறவையாய்...
கற்பனையின் கனவுகள்
விழியில்லாத விளக்கொளியாய்...
விழைந்த விருப்பங்கள்
வெறுமையின் சின்னங்களாய்...
அப்பப்பா!
அளவில்லா ஆசைகள்
வீதியுலா சென்றதாம்
விதி கெட்டு வீணற்று போக!
என்றாலும்....
என்ன்ணங்கள் ஈடேறும்
எள்ளி நகைத்தோரை
வீழ்த்த நினைத்தால்!
ஏசிய வார்த்தைகளை
எளிதே புறக்கணித்தால்...!
அவள் நிழலும் நிஜமாய் தீண்டலாம்!
முள்ளின் மீதே மீண்டும் உயிர்க்க...
நான் ஆசைப்பட்டால்
மலர்