சகாக்கள் பலர் உண்டு
ஆனால் அவன் ஒருவனை மட்டும்
கேட்டேன்....யார் நீ என்று?
சிரிக்க வைக்கிறாய்...
நீ இல்லையெனில்
சிறகிழக்க செய்கிறாய்...
அழ வைக்கிறாய்...
உன் அரவணைப்பில்
அழுகையை ரசிக்க செய்கிறாய்...
என்னை வெறுத்த காதலை
கை விட்டேன்...சகா!
உன் கரங்களை பிடித்து கொண்டு!
கவலையை தொலைத்தேன்
சகா...உன் கைகுட்டையின் சுவரிசத்தில்..!
உன் நட்பின் ஈரம்
என் விழிநீரை துடைத்தது...
என் உவகையின் உவமை நீ!
என் வாழ்க்கையின் வழித்தடம் நீ!
என் நினைவின் நிழற்படம் நீ!
ஆயினும் உன்னை கேட்டேன்...
யார் நீ என்று?
உன் உறவின் ஈரம்
என் உயிரிலே உறைந்திருப்பதை
எப்படி உணர்த்துவேன்?
நட்பின் விளிம்பில் தத்தளிக்கிறேன்!
நம் உறவு என் திருமணத்தால்
முறிவதை எண்ணி...
சகா யார் நீ?
ஏன் வந்தாய்?
என் செய்கிறாய்?
என்னிடம் ஏன் நட்பை விளித்தாய்?
உன் துணையின்றி
என் ஓடம் கரை சேருமா?
விழைகிறேன்...
நீ எனக்காய்...
என் வாழ்க்கை துணையாக...!
உறவுகளை
கொச்சைப் படுத்தவில்லை!
ஆனால்...
உணர்வுகளை
உரசிப் பார்க்கிறேன்...
உன் சிறகின்றி
நான் உயிர் வாழ்வேனா என்று?
உரைப்பாயா உன் பதிலை
மலர்