ஓட்ட பந்தயத்தில் !
ஆமையோடு போட்டியிட்டு!
தோற்றுப்போ. !
நத்தையோடு கைகோர்த்து!
நகைச்சுவையாய்!
பேசிக்கொண்டு !
நடைபயிற்சி சென்று வா. !
நுளம்புகளின் நூலகத்தில்!
முகம்சுழிக்காமல் !
சத்திய சோதனை !
புத்தகம் படி. !
அட்டைகளுக்கும்!
மூட்டை பூச்சிகளுக்கும் !
இரத்த தானம் வழங்கி!
ஆனந்த படு . !
பிரதான சாலையோரங்களில்!
வாகனங்களில்!
மோதிவிடாதவாறு!
எருமை மாடுகளை!
மேய்த்துப்பார். !
முதியோர் இல்லங்களில் !
ஆதரவற்றோர் படும்!
அவஸ்தைகளுக்குள்!
ஐக்கியப்படு !
மதுபான சாலைகளில் !
தேநீர் குடித்துவிட்டு!
புகை பிடிக்காமல் !
வெளியே வா !
உண்மை பேசு !
அறுநூறு அங்கங்கள் !
கடந்து விட்டாலும்!
இப்போதுதான் தொடங்கியுள்ளது!
என்ற உற்சாகாத்தோடு!
அறுவையானபோதும்!
அமைதியோடு!
ஒன்று விடாமல் !
தொலைக்காட்சித் தொடர்களை!
தொடர்ந்து பார் !
கிராமத்து ஒற்றையடி!
பாதைகளில் மாட்டு வண்டி !
ஒட்டு !
வாகன நெரிசல்களில்!
உன்னை தாண்ட !
எத்தனிக்கும் !
எவருக்கும் வழி கொடுத்து!
சமிக்ஞை ஒலி!
எழுப்பாமல் வாகனம் ஒட்டு !
ஒலிவாங்கி மன்னர்களின் !
அண்ட புளுகுகளை !
சலிக்காமல் செவிமடு !
இது போன்று!
உன்னால் முடியாதது !
எதுவானாலும் உனக்கது !
சாத்தியப்படுமானால் !
உண்மையில் நீ!
பொறுமையில் இந்த!
பூமியை மிஞ்சலாம்
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்