நாங்கள் பேசுவது கேட்கிறதா?.. நாட்டின் முட்டைகள்!
01.!
நாங்கள் பேசுவது கேட்கிறதா?!
-------------------------------------------!
விசயங்கள் பூக்களாக இருந்தால்!
பட்டாம்பூச்சிகளாக நாம்!
சிறகடித்துப் பேசுவோம்…!
பட்டாம்பூச்சிகளாக அவர்கள் பேசினால்!
நாம் பூக்களாக கேட்டிருப்போம் !
கடல் அளவில் விசயமென்றால்!
வீசப்படும் வலையுள் மீன்களாக பேசுவோம்…!
மீன்களாக அவர்கள் பேசினால்!
நாம் ஆழ்கடலாக கேட்டிருப்போம் !
விசயங்கள் பெருங்கல்லாக கடினமாக இருந்தால்!
சிலை செதுக்கும் உளிகளாக பேசுவோம்…!
உளிகளாக அவர்கள் பேசினால்!
வடிவெடுக்கும் பாறைகளாக கேட்டிருப்போம் !
ஊதா நெருப்பாக விசயங்கள் இருந்தால்!
சிவந்த கங்காக வெடித்துப் பேசுவோம்…!
கங்குகளாக அவர்கள் பேசினால்!
காத்திருக்கும் எரிமலையாக!
எழுச்சியுறக் கேட்டிருப்போம்!
நம்மோடு அவர்களும்!
அவர்களோடு நாமும்!
பேசி முடிவெடுக்க!
ஆயிரமாயிரம் இருக்கின்றன!
கழுத்தை இறுக்கும் பிரச்சனைகள் !
இந்த சமூகம் மாறிவிட வேண்டும்!
இது மக்களின் விருப்பம்…!
இந்த சமூகத்தை மாற்றிவிட வேண்டும்!
இது போராளிகளின் முழக்கம்! !
எடுக்கப்படும் முடிவுகள்!
செயல்களாக முடிச்சவிழ்கின்ற!
ஒவ்வொறு பொழுதிலும்…!
நாம் சமூகமாற்றத்தை!
கண்டெடுக்க முடியும் !
சிமெண்ட்டும் மண்ணும்!
நீரில் குழைந்து இறுகுதல் போல்!
மக்களாக போராளிகளும்!
போராளிகளாக மக்களும்!
சமூக விஞ்ஞான உணர்வில்!
கலந்து இறுகிவிட்டால்…!
பூ போன்ற அடக்குமுறைக்கும்!
புயல் போன்ற ஒடுக்குமுறைக்கும்!
கண்முன் அரங்கேறும் அநீதிகளுக்கும்!
கண்களில் நடனமிடும் துயரங்களுக்கும்!
சமாதி கட்டும் சரித்திரத்தை!
நாமும் படைக்கலாம்! !
!
02.!
நாட்டின் முட்டைகள்!
-------------------------------!
நாட்டை கவ்வி இருக்கின்றன பாம்புகள்!!
ஒவ்வொரு குடும்பத்தையும் அடுப்பாக்கி!
நம்மை அவித்துத் திண்கின்றன…!
சூடேறும் நீரில்!
நூறு டிகிரி வெப்பத்தில்!
வெடித்து சாவோமென!
தவளைக்கு தெரிவதில்லை!!
நாம் தவளைகளாக இருக்கின்றோம்…!
தவளைகள் தாவுவதால்!
பாம்பு பயப்படப்போவதில்லை!!
நாம் வாழ வேண்டும் !
நாட்டுப்பற்றை அடக்கியிருக்கும்!
அத்தனைக் குடும்பங்களையும்!
அடைகாப்போம்!!
அதிகார ஓட்டை உடைத்துக்கொண்டு!
கழுகு குஞ்சுகளாய் வீர அழகுடன்!
நாட்டுப்பற்று வெளிவரட்டும்!
பாம்பிற்கு பலியாக!
இன்னும் நாம்!
கோழிகளல்ல தவளைகளல்ல!
நம் கழுகு கரங்களில்!
பாம்புகளின் கதை!
நிச்சயம் முடியும்
புதியவன்