சிதைகின்றக் கனவுகள்! - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Photo by Jr Korpa on Unsplash

வீட்டில் உட்கார இடமில்லை !
நாற்காலிக் கேட்டு வந்திருந்தார். !
சென்றமுறை வாங்கிச் சென்றதிலிருந்து இன்னும் !
எழுந்திருக்காத எங்கள் தலைவர். !
கனவுக் காற்றால் !
நிரப்பப்பட்ட !
எங்கள் வாழ்க்கை பந்து !
விளையாடப் படுகிறது !
தேர்தல் மைதானங்களில் !
யார் யாரோ !
உதைத்துதைத்து !
விளையாடியபோதும் !
காற்றுப் போகாத பந்தால் !
வெற்றிக் கொண்டவர்கள் !
இறுதியில் காற்றைப் !
பிடுங்கிவிடும் !
வரலாறுகளிலிருந்து !
எழுந்திருக்க முடியாத வகையில் !
சிதைந்து போவது பந்தல்ல !
எங்கள் கனவுகள்!
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.