பலிபீடங்களில் மரணிக்கும் நியாயங்கள் ! - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Photo by Ryan Grice on Unsplash

நாங்கள் உழுதவயலில் !
எங்களுக்காக உண்ண !
பசுமையாய் ஏதுமில்லை . !
எல்லாம் நீங்கள் !
எடுத்தது போக !
வைக்கோலும் தவிடும்தான். !
விளைந்த தென்னையில் !
இளநீரும் ,தேங்காயும் !
இன்னோரன்னவைகளும் !
நீங்கள் எடுத்ததுபோக !
கழிவுகலாய்ப்போன !
பிண்ணாக்கும் சக்கைகளும் !
மட்டுமே எங்கள் உணவாய் !
மாடாய் உழைக்கிறோம் என !
நீங்கள் சொல்லிக்கொண்டபோதும் !
உங்களுக்காய் உழைத்த !
எங்களுக்கும் வேதனைகள் !
உங்களிலும் அதிகம். !
வாயில் நுரை தள்ள !
வண்டி இழுத்தும் !
வாய் ருசிக்க உண்ணாமல் !
வரண்டுபோயிருக்கும் !
எங்கள் கழிவிலும் !
வாழ்ந்துகொண்டிருக்கும் !
நீங்கள், !
ஒரு நாள் எங்களையே !
கழிவாக்கி விடுகின்றீர்கள். !
எங்களுக்கும் கூட கொடுக்காமல் !
உங்களுக்காக பால் கொடுத்த !
எங்கள் அன்னையரின் !
மடிசுரப்பை மறந்துபோகும் !
நன்றி கெட்டவர்கள் அல்லவா நீங்கள். !
நீங்கள் கைவிட்ட பின்னாலும் !
தெய்வம் எங்களை !
கைவிடாது என்றுதான் !
பிரார்த்தித்தோம் . !
வாழ்தலுக்கான !
எங்கள் பிரார்த்தனைகளையும் !
மரணத்துக்கான !
அவர்கள் பிரார்த்தனைகளையும் !
ஒரே நேரத்தில் கேட்கும் இறைவன் !
கசாப்புக் கடைக்கே !
முன்னுரிமை வழங்கும்போது, !
பலிபீடங்களில் மரணிப்பது !
நாங்கள் மட்டுமல்ல !
மாடுகள் எங்களது நியாயங்களும்தான்!!
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.