புத்தாண்டே நீ வர வேண்டும் !
வரம் பல தர வேண்டும்!
யுத்தங்கள் இல்லாத பூமி வேண்டும்!
யுக்திகள் இல்லாத அன்பு வேண்டும்!
வறுமைகள் இல்லாத தேசம் வேண்டும்!
வாழ்க்கையை ஜெயிக்க தன்னம்பிக்கை வேண்டும்!
கவலைகள் மறக்கின்ற காட்சிகள் வேண்டும்!
கண்களில் என்றும் ஆனந்த கண்ணீர்!
மட்டுமே வேண்டும் !
இயற்கையின் சீற்றம் தணிய வேண்டும்!
இல்லார், இருப்போர் !
சமத்துவம் ஓங்க வேண்டும்!
புத்தாண்டே நீ வர வேண்டும் !
எல்லா நல்லவைகளுடனும்!
புத்தாண்டே நீ வர வேண்டும்
லலிதாசுந்தர்