கணக்குப் பதிவியலும் கவிதையும்..தன்னம்பிக்கை!
01.!
கணக்குப் பதிவியலும் கவிதையும்!
-------------------------------------------------!
’எண்ணும் எழுத்தும்!
கண்ணெனத் தகும்”!
எனக்குக்!
கணக்குப் பதிவியல்!
எண்ணாகும்!
எழுத்தென்பது செய்யுளாகும்!
இரண்டிற்கும் வேண்டும்!
இலக்கணம்!
கணக்குப் பதிவியலின் விதிகள்!
அறியாமல்!
கணக்குப் பதியவே முடியாது;!
யாப்பின் இலக்கணம் அறியாமல்!
யாத்திட இயலாது செய்யுள்!
பற்று, வரவு விதிகளைப்!
பற்றிப் பிடித்தால் கணக்குச் சரியாகும் !
அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை!
இசை பாட வைக்கும் யாப்பின் சேனை!
ஒன்றோ, ஒரு கோடியோ!
ஒன்றாகப் பற்றும் வரவும் நேராகாமல்!
இடம், வலம் மாறினால்!
கடனீந்தோர் கடனாளியாவார்;!
கடனாளி கடனீந்தோராவார்!!!!
இசை பாடும் இலக்கணச் செய்யுளில்!
அசை மாறினால்; தளை தட்டினால்!
வசை பாடும்!!!!
“எமக்குத் தொழில் கவிதை” என்றான் பாரதி!
கவிதை எனக்குத் தொழில் அல்ல;!
கவிதை எனது உயிர்!!!!
“கணக்கு எனக்குப் பிணக்கு” என்றான் பாரதி!
கணக்குப் பதிவியலே எனக்குத் தொழில்!
எனது வாழ்வில் எழில்!
02.!
தன்னம்பிக்கை
கவியன்பன் கலாம்