இ.இசாக் !
சொந்தமாக !
நவீன வசதிகளோடு !
வீடொன்று !
கட்டிவிட வேண்டுமென்பதே இலட்சியமானது !
பிழைப்பிற்கென்று !
கடல் கடந்துவிட்டயெனக்கு !
வாயக்கட்டி.. வவுத்தக்கட்டி !
அங்குமிங்கும் புரட்டி !
கட்டி முடிந்தது !
அழகிய வீடு நினைத்தபடி !
தாராளமான சொந்த வீடெனக்குண்டு| !
பெருமை பேசியும் !
வீட்டின் !
அழகையும் அமைப்பையும் !
புகைப்படங்களில் இரசித்தும் !
வழக்கம் போல !
இரண்டரைக்கு ஆறு அடி படுக்கைக்குள் !
காலத்தைக் கடத்துகிறேன்
இ.இசாக்